ஜனாதிபதித் தேர்தலில் சக தமிழ் கட்சிகளின் ஆதரவு தொடர்பில் டக்ளஸ் வெளியிட்ட கருத்து - செய்திகளின் தொகுப்பு
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எனது நண்பர்களான சக தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அபிவிருத்தி நிதி வாங்கிய தமிழ்க் கட்சிகள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவார்களா என கேட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன், பொருளாதார ரீதியில் சரிந்து கிடந்த நாட்டை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,