காணாமல் போன கடற்றொழிலாளர்களின் உறவினர்களை சந்தித்த டக்ளஸ்
கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்களின் உறவினர்களை டக்ளஸ் தேவானந்தா சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று(31.05.2026) இடம்பெற்றுள்ளதுடன், சந்திப்பின் ஊடகங்களுக்கு கருத்தும் தெரிவித்துள்ளார்.
நேரில் சென்று ஆராய்ந்த டக்ளஸ்
தொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்களை தேடும் முயற்சிகளில் பலர் ஈடுபட்டிருக்கின்ற போதிலும், இதுவரையில் திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவி்ல்லை என டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
கடற்றொழிலுக்காக சென்றவர்கள் உரிய நேரத்தில் வீடு திரும்பாமல் இருப்பதால் கடற்படையினரை அனுப்பி தேடுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இவ்வாறான அனர்த்தங்களின் போது, நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து நின்று தான் முன்னெடுத்த நடவடிக்கைகளையும் இதன்போது நினைவுப்படுத்தியுள்ளார்.
