கங்காராம விகாராதிபதியை சந்தித்த அமைச்சர் டக்ளஸ்!
கங்காராம விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்சஜி தேரருக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.
கொரிய முதலீட்டாளர்கள்

இதன்போது, இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ள கொரிய முதலீட்டாளர்கள் விகாராதிபதியினால் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முயற்சிகளை எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளிநாட்டு தனியார் முதலீட்டாளர்களும், நவீன தொழில்நுட்ப அனுபவங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் பிரஸ்தாபித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் கடற்றொழில் சார் அபிவிருத்திக்கு ஒத்துழைக்க முன்வந்துள்ள
கொரிய முதலீட்டாளர்களின் ஆர்வத்தினையும் வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.