வன்னி தேர்தல் மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள டக்ளஸ் தரப்பு
வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் ( ஈ.பி.டி.பி) செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் புதிய கட்டமைப்பு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்களுடன், கலந்துரையாடலொன்றை டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்துள்ளார்.
குறிப்பாக வன்னி தேர்தல் மாவடத்தின் அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இன்றையதினம் வவுனியா செந்திருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற தேர்தலின் பின்னடைவுகள் குறித்த அக, புற காரணிகளை ஆராய்ந்து கட்சியை வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்களை மறுசீரமைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மாவட்டக் கட்டமைப்பு
இதனடிப்படையில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவடத்தின் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை செழுமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் வகையில் முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களின் அமைப்பாளராக ஜெயராஜை கொண்ட மாவட்டக் கட்டமைப்பும் தேவானந்தாவால் நியமிக்கப்பட்டது.
மேலும், கட்சியின் தேசிய மாநாட்டை விரைவில் நடத்துவதற்கு தயாராகுமாறும் கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குதிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
