விடுவிக்கப்பட உள்ள காணிகள் : அமைச்சர் டக்ளஸ் வழங்கியுள்ள அறிவுறுத்தல் (Photos)
யாழ்ப்பாண மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் இருந்து விடுவிக்கப்பட உள்ள காணிகளில் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் ஆரம்பிக்கலாம் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நேற்றைய தினம் (27.09.2023) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
வேலைத்திட்டங்களை நிறைவு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் முதற்கட்டமாக அடையாளப்படுத்தப்பட்ட காணிகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
குறித்த செயற்பாடானது பிரதேச செயலக அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளும் இணைந்து அதற்கான வேலைத்திட்டங்களை நிறைவு செய்துள்ளனர்.
ஆகவே விடுவிக்கப்பட உள்ள காணிகளில் பயிர் செய்கையை மேற்கொள்ள இருக்கும் பொது மக்கள் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
