டக்ளஸை தொடர்ந்து சிக்கப்போகும் 80 முக்கிய புள்ளிகள் - அச்சத்தில் தென்னிலங்கை
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை டக்ளஸ் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
நல்லாட்சி காலம் முடிந்து கோட்டாபய ராஜபக்ச ஆட்சி ஆரம்பிக்கும் போது பாதாள உலககுழு தலைவர் மாகந்துரே மதுஸ் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் 80 அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடுவதாக குறிப்பிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டமையானது பல சந்தேகங்களை எழுப்பியது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டுநடப்புகள் நிகழ்ச்சி..