என் மீது தாக்குதல் நடத்திய பெண்ணை எப்போதோ மன்னித்துவிட்டேன்: டக்ளஸ்

Jaffna Douglas Devananda Sri Lanka
By Theepan Jan 07, 2024 05:33 PM GMT
Report

என் மீது தாக்குதல் நடத்திய பெண்ணை எப்போதோ மன்னித்துவிட்டேன். அவரது துரிதமான விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (06.01.2024) இடம்பெற்ற சந்திப்பின்போது, குரலற்றவர்களின் குரல் அமைப்பினால், குறித்த பெண்மணியின் கருணைமனு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கொழும்பில் முச்சக்கரவண்டியை கொள்ளையடிக்க முற்பட்ட பெண் கைது

கொழும்பில் முச்சக்கரவண்டியை கொள்ளையடிக்க முற்பட்ட பெண் கைது

வழக்கிலிருந்து விடுவிக்குமாறு மனுத்தாக்கல்

யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகக் கொண்டு, முன்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான செ.சத்தியலீலா என்பவர், கடந்த 2004 ஆம் ஆண்டு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், அவசரகாலச் சட்டவிதியின் கீழ் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

என் மீது தாக்குதல் நடத்திய பெண்ணை எப்போதோ மன்னித்துவிட்டேன்: டக்ளஸ் | Douglas Confirmed About The Political Prisoner

அவ்வாறிருக்க, வழக்கு விசாரணையின் போது கொழும்பு மேல்நீதிமன்றம் இவருக்கு “15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட, இரண்டாண்டுகால சிறைதண்டனையுடன் சேர்த்து 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்தவேண்டும்” என்கின்ற நிபந்தனையுடன் 2018 ஆம் ஆண்டு விடுதலை செய்தது.

எனினும் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருப்தியுற்றிராத சட்டமா அதிபர் திணைக்களம் அத்தீர்மானத்தை ஆட்சேபித்து மேல்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தது.

என் மீது தாக்குதல் நடத்திய பெண்ணை எப்போதோ மன்னித்துவிட்டேன்: டக்ளஸ் | Douglas Confirmed About The Political Prisoner

அந்த வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றமானது மேல் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து, அரசியல் கைதியான சத்தியலீலாவுக்கு 2023 இல் மரண தண்டனைத் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் அவர், மேல்முறையீட்டு நீதிமன்றம் தனக்கு அளித்த தண்டனைத் தீர்ப்பை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி வழக்கிலிருந்து விடுவிக்குமாறு உயர் நீதிமன்றில் மீ்ண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

என் மீது தாக்குதல் நடத்திய பெண்ணை எப்போதோ மன்னித்துவிட்டேன்: டக்ளஸ் | Douglas Confirmed About The Political Prisoner

இவ்வாறிருக்கையில் சத்தியலீலா, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரலுயர்த்தி வருகின்ற, 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பிற்கு ஊடாக ஜனாதிபதிக்கு ஒரு கருணை மனுவினை அனுப்பி வைத்துள்ளார்.

கருணை மனு

அதில் அவர், "என்னைப் பொறுத்தமட்டில் 14 வருடங்களாக பட்ட துன்ப துயரங்களுக்குப் பின்னரும் ஒரு மரணதண்டனைக் கைதியாக மீண்டும் சிறைக்குச் செல்வதை இந்த ஜென்மத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாது. அதைவிட உயிரை மாய்த்துக் கொள்வதே மேல்.

என் மீது தாக்குதல் நடத்திய பெண்ணை எப்போதோ மன்னித்துவிட்டேன்: டக்ளஸ் | Douglas Confirmed About The Political Prisoner

எனவே, ஜனாதிபதி அவர்கள், பிள்ளைகளையும், பெற்றோரையும் பிரிந்து14 ஆண்டுகாலம் சிறையில் வாடி விடுதலையான பின்பும் மரணதண்டனைத் தீர்ப்பிற்கு ஆளாகியுள்ள எனக்கு கருணை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி எனது இயல்பு வாழ்விற்கு வழிவகுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் நியமனம்

இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் நியமனம்


இளம் யுவதிக்கு காதலனால் நேர்ந்த கதி

இளம் யுவதிக்கு காதலனால் நேர்ந்த கதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US