இந்தியாவிற்காக சீன நிறுவன வருகையை தடுத்த டக்ளஸ்
பூகோள அரசியலில் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் வகையிலான திட்டங்களை இடமளிக்க கூடாது என்ற டக்ளஸ் தேவானந்தாவின் உறுதியான நிலைப்பாடு நெடுந்தீவில் பரிணமிக்கும் கலப்புமுறை மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிதியுதவியில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் குறித்த மின் உற்பத்தி திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நெடுந்தீவில் முன்னெடுக்கபட்டு வருகின்ற கட்டுமாணப் பணிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையயிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மின் உற்பத்தி திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நெடுந்தீவின் வளர்ச்சியில் தொடர்ந்தும் தீவிர கவனம் செலுத்தி வருகின்ற ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அன்று மின்சாரம் இன்றி இருண்டு கிடந்த நெடுந்தீவிற்கு ஒளியூட்டும் நோக்கோடு 1996ஆம் ஆண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மின்பிறப்பாக்கி ஒன்றினை எடுத்துச் சென்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மின்சாரப் பாவனையை ஆரம்பித்து வைத்தார்.
பின்னர் 2001ஆம் ஆண்டு புனர்வாழ்வு அமைச்சராக இருந்த காலத்தில் மின்சார சபை மூலம் பாரிய மின்பிறப்பாக்கியை பொருத்தி தொடர்ச்சியான மின் விநியோகத்தினை உறுதிப்படுத்தினார்.

எனினும், மின்பிறப்பாக்கியை செயற்படுத்துவதற்கான எரிபொருள் கடல் வழியாக எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதால், மின் உற்பத்திச் செலவு அதிகமா இருந்துவந்த நிலையில், கடந்த அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக பணியாற்றிய டக்ளஸ் தேவானந்தா , தீவகத்திற்கு குறைந்த விலையில் நிலையான மின்சார விநியோத்தை உறுதிப்படுத்தும் வகையில் பாரிய வேலைத் திட்டம் ஒன்றை வடிவமைத்தார்.
குறித்த திட்டத்தினை அரச – தனியார் கூட்டு முதலீட்டில் அமைப்பதற்கு தீர்மானித்த கடந்த கால அரசாங்கம், தனியாருக்கான விலைமனுக் கோரலை வெளியிட்டிருந்தது.
கலப்பு முறை மின்சார உற்பத்தி
அதனடிப்படையில், சீனாவை தளமாக கொண்ட தனியார் நிறுவனத்திற்கு குறித்த திட்டத்தினை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது.
இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவையில் பிரஸ்தாபித்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் பூகோள அரசியல் விவகாரம் இருக்கின்ற நிலையில், தீவகத்தின் பணிகளை சீன நிறுவனத்திற்கு வழங்குவது, இந்தியாவின் நலனுக்கு பாதகமாக அமைந்து விடும் என்ற கருத்தினை முன்வைத்த நிலையில் குறித்த தீர்மானம் இரத்து செய்யப்பட்டது.

அதேவேளை, தீவகத்தில் முன்னெடுக்க திட்டமிட்ட மீள்புதுப்பிக்கத்தக்க கலப்பு முறை மின்சார உற்பத்தி திட்டத்திற்கு முழுமையான நிதியுதவியை வழங்கி அதனை அமைத்து தருவதற்கு இந்திய அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமாணப் பணிகள் தற்போது நிறைவு கட்டத்தினை அடைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri