பிசிஆர் முடிவில் சந்தேகம்! இறுதி கிரியைக்கு நீதிமன்ற தடை
திடீரென மரணித்த நிலையில் பி.சி.ஆர் பரிசோனை மூலம் கோவிட் - 19 தொற்று உறுதியான கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தின் கீழ் கடமையாற்றிய 26 வயது இளைஞனின் இறுதிக் கிரியைகளை நாளை மறுதினம் (17) வரை இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் அதன் சட்ட வைத்திய அதிகாரிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மிகவும் திடகாத்திரமாக இருந்த தமது மகன் திடீரென உயிரிழந்த பின்னர் கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், கோவிட் - 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அந்த அறிக்கை குறித்து தமக்கு சந்தேகம் எழுவதாகவும் இதனால் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
திருகோணமலையை சேர்ந்த ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ரிட் மனுவை பரிசீலனைக்கு எடுத்துகொண்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி அர்ஜூன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
இந்த மரணம் தொடர்பான விடயங்களை சமர்ப்பிப்பதற்காக நாளை மறுதினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிக்கு அறிவித்தல் விடுக்க நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா நீதிமன்றில் இன்று ஆஜரானார்





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
