ஐ.தே.கட்சியின் தலைமையகத்தில் தோஷம்:கொழும்புக்கு மாற்றுமாறு யோசனை
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்த அமைந்துள்ள நிலத்தில் தோஷம் இருப்பதாகவும் இதனால், வேறு இடத்திற்கு கட்சியின் தலைமையகத்தை கொண்டு செல்ல வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் யோசனை முன்வைத்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவிடம் அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
தலைமையகத்தை ராஜகிரியவுக்கு மாற்றுமாறு யோசனை

கொழும்பு ராஜகிரிய இருக்கும் இலங்கை மத்திய வங்கியின் கட்டடத்திற்கு அருகில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் புதிய தலைமையகத்தை நிர்மாணிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அகில விராஜ் காரியவசம் முன்வைத்த இந்த யோசனைக்கு இணங்கவோ, இணங்க மறுக்கவோ இல்லை என தெரியவருகிறது. எனினும் ஜனாதிபதி அந்த யோசனைக்கு ஜனாதிபதி அற்புதமான தீர்வை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி முன்வைத்த திட்டம்

முதலீட்டாளர் ஒருவரை அழைத்து, அந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் 8 மாடிகளை கொண்ட கட்டடம் ஒன்றை நிர்மாணிக்க சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனவும் அதன் பின்னர், அந்த கட்டடத்தில் உள்ள இரண்டு மாடிகளை கட்சியின் தலைமையகத்திற்காக ஒதுக்கிக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.