பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து வவுனியாவில் கதவடைப்பு போராட்டம் (Photos)
நாட்டில் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து இன்று செட்டிகுளத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு நாடு பூராகவும் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், அரசாங்கத்தை வீட்டுக்கு செல்ல வலியுறுத்தியும் நாடு முழுவதும் இடம்பெறும் போராட்டங்களுக்கு ஆதரவாகக் கதவடைப்பு போராட்டத்திற்கு 300 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்திருந்தன.
அந்தவகையில், அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக இந்த அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர் வரவு மிகக் குறைவாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam
கனடா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு: வரிவிதிப்பு மூலம் பதிலடி கொடுக்க திட்டம் News Lankasri