கதவடைப்புக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும்..!

Jaffna Ilankai Tamil Arasu Kachchi Sri Lankan protests
By Kajinthan Aug 16, 2025 05:02 AM GMT
Report

மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும், அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலும் அனைத்து தரப்பினரும் கதவடைப்புக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜயந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று (15) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்திலே காலாகாலமாக இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் காணப்படுகிறது.

இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதியான விசாரணைகள் நடைபெறவுமில்லை, அதற்கான ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.

மன்னாரில் காணிகளை மீண்டும் வழங்க அரசாங்கம் திட்டம்

மன்னாரில் காணிகளை மீண்டும் வழங்க அரசாங்கம் திட்டம்

இராணுவத்தினர் கைது 

இது இவ்வாறு இருக்கையில் சென்றவாரம் முல்லைத்தீவு - முத்துஐயன்கட்டிலே ஒரு குடும்பஸ்தரின் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த குடும்பஸ்தர் ஏதாவது தவறு இழைத்திருந்தால் கூட அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்து அவருக்கெதிரான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தண்டிப்பதற்கு இராணுவத்தினருக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை.

கதவடைப்புக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும்..! | Door Close Protest Vali Vadakku Thavisalar

அவரது மரணத்திற்கு காரணமான இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட நீதியான விசாரணைகள் இடம்பெறுமா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடத்தே காணப்படுகிறது.

இந்த பிரச்சினை தென்னிலங்கையில் ஏற்பட்டால் அங்கு பாரிய ஒரு ஆர்ப்பாட்டம் நடந்திருக்கும். அண்மைக்காலமாக அகழப்படும் செம்மணி மனிதப் புதைகுழியில் 150ற்கு அண்மித்ததான மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிருசாந்தி கொலை வழக்கு

அது தொடர்பான சர்வதேச விசாரணைகள் இடம்பெறுமா அல்லது அந்த விடயங்கள் அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லப்படுமா என்ற சந்தேகம் எங்களுக்கு காணப்படுகிறது.

கதவடைப்புக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும்..! | Door Close Protest Vali Vadakku Thavisalar

400 தொடக்கம் 600பேரை கொலை செய்து புதைத்ததாக கிருசாந்தி கொலைவழக்கு குற்றவாளியான இராணுவச் சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச கூறியுள்ளார். அந்தவகையில் முத்துஐயன்கட்டு கொலை சம்பவத்தையும் இந்த இராணுவமே செய்துள்ளதாக எமக்கு வலுவான சந்தேகம் எழுந்துள்ளது.

இனியும் இவ்வாறான சம்பவங்கள் இந்த நாட்டிலே இடம்பெறக்கூடாது என்பதற்காகவும், இராணுவ அதிகரிப்புக்கு எதிராகவும் எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு கிழக்கில் கதவடைப்பு கடைப்பிடிக்கப்படவுள்ளது.

எனவே வர்த்தக சங்கம், உணவகங்கள், பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் போன்ற அனைத்து தொழிற் சங்கங்களும் இந்த கதவடைப்புக்கு ஆதரவு தரவேண்டும்" என கூறியுள்ளார். 

பொலிஸாருக்கு எதிராக ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள்

பொலிஸாருக்கு எதிராக ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள்

2025 ஐ.நா ஆணையாளர் அறிக்கையில் ஈழத்தமிழர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

2025 ஐ.நா ஆணையாளர் அறிக்கையில் ஈழத்தமிழர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

சங்குவேலி, London, United Kingdom

27 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், காங்கேசன்துறை, அளவெட்டி வடக்கு, சிட்னி, Australia

02 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, வேலணை கிழக்கு, கொழும்பு

23 Sep, 2015
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, நாவற்காடு

13 Oct, 2013
மரண அறிவித்தல்

Vasavilan, London, United Kingdom

30 Sep, 2025
33ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொடிகாமம்

06 Oct, 1992
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 9ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

12 Oct, 2005
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US