சட்டவிரோத சொத்து குவிப்பு குறித்து சேறு பூச வேண்டாம்
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் சேறு பூசல்களில் ஈடுபட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவரேனும் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்திருந்தால் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு பிரதானி உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்துள்ளதாகவும் அவர்களுக்கு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
கோடிக்கணக்கான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் குவித்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த பட்டியலில் தமது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஹர்ஷன தெரிவித்துள்ளார். எனினும், தாம் எந்த வகையிலும் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது சொத்துக்கள் அனைத்துமே பெற்றோர் மற்றும் அவர்களது பெற்றோர் வழி சொத்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே வெறுமனே சேறுபூசல்கள் நிறுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 21 மணி நேரம் முன்

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
