மகிந்தவின் பாதுகாப்பை வலியுறுத்தும் ரணில் தரப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பினை மலினப்படுத்த வேண்டாம் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து தீர்மானங்களை எடுக்கும் போது அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு
கடந்த காலங்களில் அரச தலைவர்கள் அகால மரணங்களை எதிர்நோக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே பிரபுக்களின் பாதுகாப்பு, பாதுகாப்பு அமைச்சிடம் அரசியல் சாசனத்தின் பிரகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கும் பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மஹிந்த ராஜபக்ச நாட்டில் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் என வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri