மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் செய்ய வேண்டாம்: பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்

Ampara Jaffna Sri Lanka Politician Sri Lanka Sri Lankan political crisis
By Theepan Sep 18, 2022 06:09 AM GMT
Report

மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டாம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய தியாக தீபம் திலீபன் அகிம்சை போராட்டத்தின் உச்சத்தினை தொட்டவராவார்.

மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் செய்ய வேண்டாம்: பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் | Dont Politicize The Sacrifices Of Heroes

தியாக தீபம் திலீபன்

பன்னிரெண்டு நாட்களாக நீர், ஆகாரம் எதுவுமின்றி தன்னையே உருக்கி தமிழ் இனத்தின் விடுதலை தீயை ஏற்றி வைத்தவர்.

காந்திய தேசத்திற்கே அகிம்சையை போதித்தவறான தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவு நாட்களின் ஆரம்ப தினமான வியாழக்கிழமையன்று (15.09.2022) அதற்கு முன்பாக நடைபெற்ற ஒழுங்குபடுத்தல் நிகழ்வுகளின் போதும் இடம்பெற்ற கட்சி அரசியல் ரீதியான முறுகல் நிலை, தமிழ் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியையும் கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது.

தியாகி திலீபன் அறப்போரினை நடத்தி நல்லூர் மண்ணிலேயே இச்சம்பவங்கள் நடைபெற்றது மிக வேதனை அளிப்பதாக உள்ளது. அளவிட முடியாத தியாகத்தினை எவருமே தமது அரசியலுக்கு பயன்படுத்துவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

உண்ணாவிரத போராட்டம்

நினைவேந்தலின் போது ஒரு மாவீரரின் தந்தை, தியாகி திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தில் கூட இருந்தவரும், நீண்ட நெடிய போராட்ட வரலாற்றை கொண்ட மூத்த போராளியுமான ஒருவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் செய்ய வேண்டாம்: பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் | Dont Politicize The Sacrifices Of Heroes

ஒரு மாவீரரின் வணக்க நிகழ்வில் இன்னொரு மூத்த போராளியை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பார்த்தீபன் இன்னமும் பசியுடனேயே இருக்கின்றான்.

35 வருடங்கள் கடந்தும் தியாகி திலீபனின் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், எமது உரிமைகளை இழந்து, எமது நிலங்கள் எங்கள் எதிரியினால் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்படும் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளோம்.

நினைவெழுச்சி நிகழ்வுகள்

அனைவரும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்த்து, நினைவெழுச்சி நிகழ்வுகளின் புனிதத்தை களங்கப்படுத்தாத வகையில் நடந்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நினைவெழுச்சி நிகழ்வுகள் எந்தவொரு அரசியல் கட்சியினதும் தனியுரிமை சொத்தல்ல. இந்த நிகழ்வுகள் மக்கள் மயப்படுத்தப்பட்டு மக்களின் முன்னெடுப்பில் நடைபெறுவதாகவே அமைய வேண்டும்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான பொதுக்கட்டமைப்பு தொடர்பான முன்னெடுப்புகள் நடைபெறுவதாக அறிகின்றோம்.

ஆயினும் நாம் மேலே குறிப்பிட்டது போல் நினைவெழுச்சி நிகழ்வுகள், அதற்கான பொதுக்கட்டமைப்பு என்பன கட்சி அரசியலை கடந்து பொது சமூகமாகிய மாவீரர்களின் பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர்கள், மத தலைவர்கள், புத்திஜீவிகள், மாணவர்கள், சிவில் சமூகத்தினர், பொது மக்கள் அடங்கியவர்களின் முன்னெடுப்பிலேயே கட்டமைக்கப்படவேண்டும். இந்த முன்னெடுப்பினை மேற்கொள்ளும் பொது சமூக தரப்பிற்கே எமது பரிபூரணமான ஆதரவு இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் செய்ய வேண்டாம்: பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் | Dont Politicize The Sacrifices Of Heroes

இது தொடர்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை தீர்த்துக்கொள்ளும் களமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தியாக தீபம் திலீபனின் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் எனும் இலட்சிய வாக்குக்கு அமைய தொடர்ந்து பயணிப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US