பொது வேட்பாளருக்கு வாய்ப்பை வழங்கக் கூடாது! - சஜித்
ஐக்கிய மக்கள் சக்திக்குள் பொது வேட்பாளருக்கு வாய்ப்பை வழங்கக் கூடாது என அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் முதல் செயற்குழுக் கூட்டத்தில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இந்த யோசனைக்கு செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளியில் உள்ள கட்சி ஒன்றில் இருந்து பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்தி பாடம் கற்றுக் கொண்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் வெளியில் இருந்து வரும் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை அடிப்படையாக கொண்டு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி, பெரிய கூட்டணியாக அதனை உருவாக்க வேண்டும் எனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் பொது வேட்பாளராக போட்டியிடலாம் எனவும் அதனை அடிப்படையாக கொண்டு சம்பிக்க ரணவக்க, 43ஆவது படைப்பிரிவு என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளதாகவும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam