சம்பளத்தில் பாதியை நன்கொடையாக வழங்குங்கள்! - அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்கள் சம்பளத்தில் பாதியை கோவிட் நிதிக்கு நன்கொடையாக வழங்குமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“பணம் இல்லாத மக்கள் பிரதிநிதிகளிடம் இந்த கோரிக்கையை நாங்கள் முன்வைக்கவில்லை. ஆனால் வருமானம் உள்ள அனைத்து எம்.பி.க்களும் இந்த நேரத்தில் தங்கள் சம்பளத்தில் பாதியை நன்கொடையாக வழங்க முன்வர வேண்டும்.
அது மிகவும் முக்கியமானது என்பது என் உணர்வு. நம் நாட்டில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனைவரும் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை இந்த நேரத்தில் நன்கொடையாக வழங்குவது பயனுள்ளது.
இது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல அனைத்து வணிகர்களுக்கும் பொருந்தும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளார்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
