டொனால்ட் ட்ரம்ப்பின் பேஸ்புக் கணக்கு முடக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பேஸ்புக் கணக்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
காலவரையறையின்றியும் அவர் பேஸ்புக் கணக்கு இடைநிறுத்தப்படும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையின்படி எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி ஜோ பைடனுக்கு அதிகாரம் மாற்றப்படும் வரை ஜனாதிபதியால் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவுகளை மேற்கொள்ளமுடியாது.
அவரது ஆதரவாளர்கள் அமெரிக்க கெப்பிட்டல் கட்டிடத்தை நேற்று தாக்கிய பின்னர் இந்த இரண்டு சமூக தளங்களும் அவருக்கு 24 மணி நேர தடையை விதித்தன.
ட்ரம்பை பதிவிட அனுமதிப்பதால் ஏற்படும் அபாயங்கள் பாரியவை என்று மிகப் பேஸ்புக்கின் தலைவர் மார்க் ஸூக்கர்பெர்க் தெரிவித்திருந்தார்.
முன்னதாக கெப்பிட்டல் கட்டிடத்தை தமது ஆதரவாளர்கள் தாக்கிய போது, அவர்களுக்கு தமது பேஸ்புக்கின் ஊடாக ஜனாதிபதி ட்ரம்ப் தமது அன்பை வெளிப்படுத்துவதாக பதிவு ஒன்றை செய்திருந்தார்.
அத்துடன் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக மீண்டும் குற்றம் சுமத்தியிருந்தார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
