அமெரிக்க 'கிரீன் கார்ட்' திட்டம்! டொனால்ட் ட்ரம்பின் அதிரடி உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகளுக்கு திட்டமான 'கிரீன் கார்ட்' (Green Card) திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளார்.
பிரவுன் பல்கலைக்கழகத்தில் (Brown University) அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இடைநிறுத்தம்
உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம், சமூக தளமான X இல் ஒரு பதிவில், ட்ரம்பின் உத்தரவின் பேரில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகளுக்கு திட்டத்தை இடைநிறுத்த உத்தரவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
The Brown University shooter, Claudio Manuel Neves Valente entered the United States through the diversity lottery immigrant visa program (DV1) in 2017 and was granted a green card. This heinous individual should never have been allowed in our country.
— Secretary Kristi Noem (@Sec_Noem) December 19, 2025
In 2017, President Trump…
குறித்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் காயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவன் இந்த கிரீன் கார்ட் திட்டத்தின் ஊடாகவே அமெரிக்காவில் குடியுரிமையை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதிரடி உத்தரவு
இதற்கமைய, அமெரிக்கக் குடியுரிமையை வழங்கும் இந்த குடிவரவு சேவைத் திட்டத்தை நிறுத்துமாறு ஜனாதிபதி ட்ரம்ப் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விசா திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து 50,000 பேர் சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்குள் நுழைய முடியும்.
அந்த வகையில், இந்த ஆண்டும் 'கிரீன் கார்ட்' திட்டத்திற்காக சுமார் 20 மில்லியன் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை தெரிவிக்கப்பட்டுள்ளது.