எலான் மஸ்க் காலுக்கு முத்தமிடும் ட்ரம்ப்! வெளியான AI காணொளி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) எலான் மஸ்க்கின்(Elom musk) கால்களை வருடி முத்தமிடுவது போல் சித்தரித்து செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு காணொளி வெளியாகியுள்ளது.
அமெரிக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் (HUD) கட்டிடத்தில் உள்ள தொலைக்காட்சி திரைகளில் இந்த AI காணொளி ஒளிபரப்பப்பட்டுள்ளது.
அமெரிக்க ஊடகங்கள்
இது இருவரின் உறவை கேலி செய்வது போல் இருந்தது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Holy shit. The screens have reportedly been hacked at the Department of Urban and Planning and now depict an image of Donald Trump kissing Elon Musk’s feet. pic.twitter.com/9xl1E8WwFc
— CALL TO ACTIVISM (@CalltoActivism) February 24, 2025
அமெரிக்க நாளிதழ் ஒன்றில் அறிக்கையில், "ட்ரம்ப் கடந்த வாரம் ட்ரூத் சோஷியல் தளத்தில் "Long Live the King!" என்று எழுதிய பதிவைக் குறிக்கும் வகையில், AI மூலம் உருவாக்கப்பட்ட காணொளியில் "Long live the real king" என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன" என்று குறிப்பிட்டிருக்கிறது.
"இது வரி செலுத்துவோரின் பணம் மற்றும் வளங்களை வீணடிக்கும் செயல். சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்," என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கேஸி லோவெட் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் எக்ஸ் சமூக ஊடக தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், அண்மைகாலங்களில் ட்ரம்பின் அரசியல் விடயங்களிலும் பங்கெடுத்து வருகின்றார்.

கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு! மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்
சர்ச்சை
மேலும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வது உட்பட, அதிக அதிகாரத்தை ட்ரம்ப் அவரிடம் வழங்கியுள்ளார்.
செலவுகள் மற்றும் ஊழியர்களை குறைப்பது குறித்து நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கும் அரசு செயல்திறன் துறைக்கு தலைமையேற்று வழிநடத்த எலான் மஸ்கை டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.
முன்னாதக, அரசு ஊழியர்கள் கடந்த வாரம் தாங்கள் செய்த ஐந்து விஷயங்களை பட்டியலிட்டு ஒரு மின்னஞ்சலுக்கு பதிலளிக்க வேண்டும் என்று எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையிலேயே இவ்வாறான காணொளியொன்று வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நாக சைதன்யாவின் தண்டேல் படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா? Cineulagam

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri

தப்பிக்க நினைத்து முத்துவின் கண்ணில் பட்ட ரோஹினி மாமா, இனி நடக்கப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
