டொனால்ட் ட்ரம்பின் கருத்தால் சர்ச்சை! பிரித்தானியாவில் ஏற்படுத்திய பெரும் அரசியல் அதிர்வலை
ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்ட பிரித்தானிய துருப்புக்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கள், பிரித்தானியாவில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது "அவமதிப்பானது மற்றும் அதிர்ச்சியானது" என்று பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் சாடியுள்ளார்.
ட்ரம்ப்பின் பேச்சு
ட்ரம்ப்பின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் கீர் ஸ்டார்மர், "நான் இது போன்ற தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தால் அல்லது பேசியிருந்தால், நிச்சயம் மன்னிப்பு கேட்டிருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நேட்டோ (NATO) அமைப்பின் கூட்டுப் பாதுகாப்பு விதியின் கீழ் அமெரிக்காவுடன் இணைந்து பிரித்தானியா ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்றது.
இந்த நீண்டகாலப் போரில் பிரித்தானியாவைச் சேர்ந்த 457 வீரர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.
பெரும் சர்ச்சை
இந்தநிலையிலேயே நேட்டோ (NATO) நாடுகளின் படைகள் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய ட்ரம்ப், ஆப்கானிஸ்தான் போரில் அவர்கள் போர்க்களத்தின் முன்னணியில் (Frontlines) நின்று போரிடவில்லை என்றும், பின்வாங்கியே இருந்தனர் என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், அமெரிக்காவுக்கு ஆபத்து வரும்போது நேட்டோ நாடுகள் உதவுமா என்பது தமக்கு சந்தேகமே என்றும், "அமெரிக்காவிற்கு இதுவரை அவர்கள் தேவைப்பட்டதே இல்லை" என்றும் அவர் பேசினார்.
இந்த கருத்துகளே தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan