அமெரிக்க வரலாற்றில் இருள் சூழ்ந்த பக்கம்!கைதுக்கு பின்னர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்களிடையே ஆவேச பேச்சு
ஆபாசப்பட நடிகைக்கு தேர்தல் பணத்தை வழங்கிய குற்றச்சாட்டில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீதிமன்றிலிருந்து வெளியேறி சிறப்பு விமானத்தில் புளோரிடா பயணமாகியிருந்தார்.
ஆபாச நடிகையுடனான உறவை மூடிமறைக்க, சம்பந்தப்பட்ட நடிகைக்கு டிரம்ப் பெருந்தொகை பணத்தினை வழங்கியமை மற்றும் 34 பொய்யான வணிகப் பதிவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா நகரத்திற்கு போகிறது
இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள டிரம்ப் கைதுக்கு பின்னர் ஆதரவாளர்களிடையே கடும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
‘‘ ஒரு அமெரிக்கராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். அமெரிக்காவில் இதுபோன்று எதுவும் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நான் செய்த ஒரே குற்றம், நம் தேசத்தை அழிக்க நினைப்பவர்களிடம் இருந்து அச்சமின்றி நாட்டை பாதுகாப்பது தான்"
அமெரிக்கா நகரத்திற்கு போகிறது எனக்கு பெரிய ரசிகர்களாக இல்லாதவர்கள் கூட, இப்படி நடந்து இருக்க கூடாது என கூறுகின்றனர். தான் இப்போது எதிர்கொள்வது "தேர்தல் குறுக்கீடு",வரவிருக்கும் 2024 தேர்தலில் குறுக்கீடுகளை ஏற்படுத்தவே இந்த பொய் வழக்குகள் என் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனை உடனடியாக கைவிட வேண்டும்.
அமெரிக்காவில் இப்படி நடக்கும் என்று நான் நினைத்து கூட பார்த்தது இல்லை. ஒரு போதும் நினைத்தது இல்லை. நான் செய்த ஒரே தவறு என்னவென்றால், 'அமெரிக்காவை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து, பயமின்றி நாட்டை காத்தது தான்.
அமெரிக்க வரலாற்றில், இருள் சூழ்ந்த பக்கத்தில் இருக்கிறோம். ஆனால், நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். நாடு நரகத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. நான் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன் என்று என்னால் கூற முடியும்.
நான் செய்த ஒரே குற்றம், நம் நாட்டை அழிக்க முற்படுபவர்களிடமிருந்து அச்சமின்றி பாதுகாப்பதுதான். நமது எல்லைகளை திறந்து விட்டதை பார்த்தும், ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் திரும்ப பெறப்பட்டதை பார்த்தும் உலக நாடுகள் அமெரிக்காவை பார்த்து சிரிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
