நீதிமன்றத்திலிருந்து சிறப்பு விமானத்தில் புளோரிடா பயணமான டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீதிமன்றிலிருந்து வெளியேறி சிறப்பு விமானத்தில் புளோரிடா பயணமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணைகள் டிசம்பர் 4ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஆபாசப்பட நடிகைக்கு தேர்தல் நிதியினை வழங்கிய குற்றச்சாட்டில் டிரம்ப் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,டொனால்ட் டிரம்ப் எதிரான 34 குற்றச்சாட்டுகளையும் உள்ளடக்கி முத்திரையிடப்பட்ட குற்றப்பத்திரிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 34 குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குற்றவியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் ஜனாபதி என்ற பெயரை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார்.
முதலாம் இணைப்பு
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவியல் விசாரணைக்காக அவர் சற்றுமுன்னர் நீதிமன்ற தனி அறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
குற்றவியல் வழக்கு விசாரணைகளுக்காக மன்ஹாட்டனில் உள்ள மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்த அவர், விசாரணைக்கு முன்னதாக பொலிஸ் காவலில் வைக்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டிரம்ப் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக கைரேகைகள் பதிவு செய்யப்படுவதுடன், அவரை புகைப்படம் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விசாரணையினை தொடர்ந்து டிரம்ப் சட்ட அமுலாக்கப் பாதுகாப்பில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
