எவரும் ஓடி ஒளியாதீர்..! அநுர விடுத்த அழைப்பு
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், இத்தகைய சவாலை எதிர்கொள்வது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதுடன், ஓடி ஒளிவதோ அல்லது அச்சத்துடன் பார்ப்பதோ அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற கடற்படையின் நிகழ்ச்சி ஒன்றின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கை
நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த அச்சுறுத்தலில் இருந்து தாய்நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri