சிங்களம் தெரியாது! பொலிஸாரிடம் முரண்பட்ட சிறீதரன்:பரபரப்பை ஏற்படுத்தும் காணொளி (Video)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீதிமன்றத்திற்கு வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையினை இன்றைய தினம் பொலிஸார் வழங்கியுள்ளனர்.
அந்த கட்டளை சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக சிங்கள மொழி தனக்கு வாசிக்கத் தெரியாது எனவும் ஆகவே இந்த கட்டளையினைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழில் கொண்டு வந்து தருமாறும் கூறி அவர்களிடம் மீளக் கையளித்துள்ளார்.
பின்னர் பொலிஸார் அந்த கட்டளையை தமிழில் மொழிபெயர்த்து கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.
இதனைதொடர்ந்து நீதிமன்றத்திற்கு தன்னை வருவதற்கு அழைக்கும் அழைப்பை நீதிமன்றம் தான் வழங்க முடியுமே தவிர நீதிமன்றத்திற்கு அழைக்கும் அழைப்பை பொலிஸார் எனக்கு வழங்க முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் வினவியுள்ளார்.
இதற்கு பதிலளிக்க முடியாமல் பொலிஸார் அமைதியாக இருந்தனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
