திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு எதிராக இருப்போம்! பிள்ளையான் சூளுரை
சிங்களம், தமிழ், முஸ்லிம் யாராக இருந்தாலும் காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்க வேண்டும். பிணக்குகள் வரும்போது அதனைத் தீர்த்துக்கொடுக்க வேண்டும். சமநிலையைக் குழப்புகின்ற திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு நாங்கள் எதிராக இருப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு வீடு காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு - களுதாவளை, விச்சுக்காலை வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடொன்றில் நடைபெற்றுள்ளது.
இதன்போது உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது மாவட்டத்திலே, நாட்டிலே வாழ்கின்ற எல்லோருக்கும் காணி இருக்க வேண்டும். அனைவருக்கும் காணி வழங்க வேண்டும். மட்டக்களப்பிலே தேவநாயகம் ஐயாவின் காலத்தில் வலைவாடியில் சிங்கள மக்கள் இருந்தார்கள். ஏறாவூரிலே சிங்கள மக்கள் இருந்தார்கள், காணியைப் பற்றித் தெரிந்த நிருவாகிகளுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் இது தெரியும்.அவர்கள் வரலாறு தெரியாமல் நடக்க முடியாது.
வீட்டுக்கு வீடு சென்று அமைச்சர் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைப்பதென்பது விசித்திரமானதொரு நிகழ்வாக இருக்கலாம். காணி அற்றோருக்கு காணி வழங்குவது, காணி உறுதிப்பத்திரம் இல்லாதோருக்கு உறுதிப்பத்திரங்களை வழங்குவது, என்ற நோக்கத்தின் அடிப்படையில் காணி அமைச்சர் என்ற அடிப்படையில் காணி அமைச்சர் இதனை முன்னெடுத்து வருகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி சம்மந்தமான பிரச்சினைகள், பிணக்குகள் உள்ளன. அதனை முடித்து வைப்பதற்கு நாங்கள் அனைவரும் பாடுபட வேண்டும். இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஊடகங்களைப் பார்த்தால் சிங்கள மக்களுக்கு மாத்திரம் அமைச்சர் காணி உறுதிப்பத்திரம் வழங்குவது போன்றும் அதற்கு நாங்களும் துணை போகின்றோம் என்ற விதத்தில் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் தகவல்களை பிழையாக வழங்கி தவறாக வழி நடாத்தப்படுகின்றார்கள்.
எமது மாவட்டத்திலே, நாட்டிலே வாழ்கின்ற எல்லோருக்கும் காணி இருக்க வேண்டும். அனைவருக்கும் காணி வழங்க வேண்டும். மட்டக்களப்பிலே தேவநாயகம் ஐயாவின் காலத்தில் வலைவாடியில் சிங்கள மக்கள் இருந்தார்கள்.
ஏறாவூரிலே சிங்கள மக்கள் இருந்தார்கள், காணியைப் பற்றித் தெரிந்த நிருவாகிகளுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் இது தெரியும்.அவர்கள் வரலாறு தெரியாமல் நடக்க முடியாது.
சிங்களம், தமிழ், முஸ்லிம் யாராக இருந்தாலும் காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்க வேண்டும். பிணக்குகள் வரும்போது அதனைத் தீர்த்துக்கொடுக்க வேண்டும். சமநிலையைக் குழப்புகின்ற திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு நாங்கள் எதிராக இருப்போம்.
எனவே பொறுப்பான ஊடகங்கள் எல்லாவற்றுக்கும் இனவாதத்தைக் கக்குகின்றது போல் நடந்துகொள்ளக்கூடாது. மிக பெரிய கோவிட் தொற்றைத் தடுப்பதற்குப் போராடி, வருமானம் குறைந்திருக்கின்ற வேளையிலும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி, பல விமர்சனங்களைத் தாண்டி ஜனாதிபதி முன்னோக்கி சென்று கொண்டிருக்கின்றார்.
ஆசிரியர் பிரச்சினை, தேசியம் கதைப்பவர்களும், வேட்டியை மடித்துக் கொண்டு உரப்பிரச்சினை தொடர்பில் கிளம்பியுள்ளார்கள். இவைகளையெல்லாம் முடிவுறுத்தி விளைச்சலை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை எடுக்கின்றோம்.
நாம் எடுக்கின்ற முடிவு இயற்கைக்கும், நிலத்திற்கும், மக்களுக்கும், பாதிப்பை ஏற்படுத்தாது கொடையாகத்தான் நாம் பார்க்கின்றோம். சமூகத்தை உருவாக்குவது, பசுமையான நிலத்தை உருவாக்குவது, இதற்கு மக்களும், ஊடகங்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.




ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri