10 வாரமாக அடர்ந்த காட்டில் உரிமையாளரின் உடலை பாதுகாத்த வளர்ப்பு நாய்! நெகிழ்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் நாய் ஒன்று உரிமையாளரின் உடலை 10 வாரமாக பாதுகாத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த உரிமையாளர்
அமெரிக்கா, கொலராடோவைச் சேர்ந்த 71 வயதையுடைய ரிச் மூர் என்பவர் அங்கு அமைந்துள்ள பிளாக்ஹெட் சிகரத்திற்கு வளர்த்த ஃபின்னி என்ற நாயுடன் ட்ரெக்கிங் சென்றுள்ளார். இதன்போது மலை ஏறுகையில் கடும் குளிரால் ரிச் உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து, அந்த நாய் இறந்துப்போன தனது உரிமையாளரின் அருகிலேயே 72 நாள்களாக தங்கி இருந்துள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பின் உடலை உறவினர்கள் கண்டறிந்துள்ளனர்.
நெகிழ்ச்சி சம்பவம்
அப்போது, ஃபின்னி எடைக் குறைந்து அதன் எலும்புகள் எல்லாம் தெரிகிற அளவிற்கு மோசமான நிலையில் இருந்துள்ளது.
உடனே அதனை வைத்திய சாலையில் அனுமதித்ததில் சிகிச்சைக்குப் பின் நலமாக இருப்பதாக ரிச் மூரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த வளர்ப்பு நாய் கடும் குளிரைத் தாக்குப் பிடித்துகொண்டு உயிருடன் இருந்தமை அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
