ரிஷாத் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி உயிரிழப்பு - அஜித் ரோஹண தெரிவித்துள்ள விடயம்
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில் எரிகாயங்களுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமி தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹண கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அக்கரப்பத்தனை பகுதியை சேர்ந்த 16 வயதும் 8 மாதங்களுமான சிறுமி ஒருவர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதினின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் கடந்த 3 ஆம் திகதி எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையிலேயே அவர் நேற்று (15) உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொரல்லை பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 19 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri