புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் கரையொதிங்கிய டொல்பின்கள்(Photos)
புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் உயிரிழந்த நிலையில் இரண்டு டொல்பின்கள் கரையொதிங்கியுள்ளதுடன் இரண்டு டொல்பின்கள் உயிருடன் மீட்கப்பட்டு ஆழமான பகுதியில் கடற்தொழிலாளர்களினால் விடுவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் வண்ணாத்திவில்லு திருக்கப்பல்லம் பகுதியில் இரண்டு டொல்பின்கள் இன்று காலை உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியுள்ளன.
வனஜீவராசிகள் திணைக்களம்


குறித்த டொல்பின்கள் வலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த டொல்பின்களுக்கு மிருக வைத்தியர் எச்.கே. இசுருவினால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
7 அடி நீளம் கொண்ட டொல்பினொன்றும் 4 அடி நீளம் கொண்ட டொல்பினொன்றுமே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியுள்ளது.
டொல்பின்கள்


இதேவேளை புத்தளம் வண்ணாத்திவில்லு கல்லடி களப்பின் கரையோரத்தில் இரண்டு டொல்பின்கள் அப்பகுதி கடற்தொழிலாளர்களால் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.
உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்ட குறித்த இரண்டு டொல்பின்களும் படகில் சென்று ஆழமான பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளன.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 9 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri