சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கிடைக்கக்கூடிய டொலர்கள் தொடர்பில் தகவல்
2022 அக்டோபர் மாதத்தில் 42,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் வருகை
அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 568,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டும் முக்கிய வழிகளில் ஒன்றாக சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள இலங்கை, 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என நம்புவதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
1.8 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்
எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வருகை தந்தால், சுற்றுலாத் துறையின் மூலம் அரசாங்கத்திற்கு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதத்திலும் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள்
இலங்கைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
