புலம்பெயர் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் செயற்படவில்லை என்றும், நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள போதும் நிதி மோசடி இன்னும நிறுத்தப்படவில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதி, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வரலாற்றில் ஒருபோதும் வரவு செலவு யதார்த்தமாகியதில்லை. அதில் கூறும் விடயங்கள் கனவு உலகத்துடன் தொடர்புடையதாகவே இருந்துள்ளது. செலவுகள் ஊழல்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது.
ஆகவே புலம்பெயர் இலங்கையர்கள் நாட்டிற்கு டொலர் அனுப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை தொடர்ந்தும் வலியுறுத்துவேன். மக்கள் போராட்டம் வெற்றிப் பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
