டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் சிக்கல்
இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை இறக்குமதி செய்வதில் நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அமைந்துள்ளது என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு இறக்குமதி தொடர்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையுடன் ரூபாவின் பெறுமதி இறக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனம் கூறியுள்ளது.
எனினும் இந்த நிலைமையானது ஒக்டோபர் முதலாம் திகதிக்கு பின்ன மாற்றமடையும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கைக்கு வழங்கப்படும் பொருட்களுக்கான பணம் செலுத்தப்படுவது தாமதமாவதால், மீண்டும் பொருட்களை கப்பலில் ஏற்ற விநியோகஸ்தர்கள் தயங்குவதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam