அதிகரிக்கும் டொலரின் பெறுமதி - மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணய மாற்று நிலவரம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய (12.06.2023) பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290.06 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 303.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
எனினும் கடந்த வெள்ளிக்கிழமை (09.06.2023) மத்தியவங்கி வெளியிட்ட நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில் டொலரின் கொள்முதல் பெறுமதி 288.08 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 301.12 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
அந்த வகையில் பார்க்கும் போது கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
யூரோ மற்றும் ஸ்ரேலிங் பவுண்
அத்துடன் ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 364.13 ரூபா, விற்பனை பெறுமதி 382.61 ரூபா.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310.61 ரூபா, விற்பனை பெறுமதி 327.37 ரூபா.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318.28 ரூபா, விற்பனை பெறுமதி 338.05 ரூபா.
அவுஸ்திரேலிய டொலர்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.86 ரூபா, விற்பனை பெறுமதி 228.49 ரூபா.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 194.23 ரூபா, விற்பனை பெறுமதி 205.93 ரூபா.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214.42 ரூபா, விற்பனை பெறுமதி 226.92 ரூபா.
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2.07 ரூபா, விற்பனை பெறுமதி 2.18 ரூபா.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |