இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(11.12.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் உயர்வடைந்துள்ளதுடன், ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சிநிலை பதிவாகியுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (11.12.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.37 ரூபாவாகவும், கொள்வனவு விலை 322.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 245.60 ரூபாவாகவும், கொள்வனவு விலை 234.84 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 359.40 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 344.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 417.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 402.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
