உயர்ந்த வேகத்திலேயே மீண்டும் வலுவிழந்த இலங்கை ரூபா! 24 மணிநேரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
நேற்று முன்தினம்(02.08.2023) மற்றும் நேற்று(03.08.2023) ஆகிய இரு தினங்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(04.08.2023) பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (04.08.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.65 ரூபாவாகவும், கொள்வனவு விலை 312.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 245.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 233.24 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 358.88 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 341.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 416.47 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 397.22 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan