இலங்கை ரூபாவின் பெறுமதியில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு
இலங்கை ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மீண்டும் அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி
மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும்.
வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப டொலர் வீதத்தை தீர்மானிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. சமீபகாலமாக ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கத்திற்கு முற்றிலும் டொலர் பரிவர்த்தனையே காரணம்.
இறக்குமதி கட்டுப்பாடு
கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தவுடன், ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் இருந்து இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |