இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு உயர்வு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(01.06.2023) மேலும் அதிகரித்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இதற்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று வாரங்களாக மீண்டும் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வந்தது.
எனினும் நேற்று முன்தினம் அமெரிக்க டொலர், யூரோ, பிரித்தானிய பவுண்ட் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று ரூபாவின் பெறுமதி நேற்றும், இன்றும் கணிசமாக உயர்வடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(01.06. 2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.23 ரூபாவாகவும், கொள்வனவு விலை 283.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 319.36 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 302.24 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 370.94 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 352.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri