ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கியின் தகவல்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 327.02 ரூபாவாகவும், கொள்வனவு விலை 312.07 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இந்தநிலையில் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360.46 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 341.20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 406.80 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 385.35 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan