ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வந்த நிலையில் இன்றையதினம் ரூபாவின் பெறுமதியில் சடுதியான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 334.20 ரூபாவாகவும், கொள்வனவு விலை 316.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.
இதேவேளை, யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 361.91 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 342.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 411.20 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 388.94 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
