ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு! இலங்கை மத்திய வங்கி
இலங்கை ரூபாவிற்கு நிகராக இன்று (10.03.2023) பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்க டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் விலையில் மாற்றம்

அந்த வகையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு விலை 311.62 ரூபாவாகவும், விற்பனை விலை 328.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி டொலரின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகி இருந்தது.
இதேவேளை இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின் தினசரி மாற்று வீதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலையில் இன்று சிறிதளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri