இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (12) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று உயர்வடைந்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.79 ரூபாவாகவும், கொள்வனவு விலை 291.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 208.83 ரூபாவாகவும், கொள்வனவு விலை 200.34 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 328.54 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 315.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 389.27 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 375.12 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 190.59 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 181.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் ரிலீஸ்.. எப்போது தெரியுமா? Cineulagam
