டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.93 ரூபாவாகவும், கொள்வனவு விலை 359.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

எவ்வாறாயினும், நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 358.24 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 343.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 399.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 384.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri