இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! மத்திய வங்கியின் தகவல்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.37 ரூபாவாகவும், கொள்வனவு விலை 314.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இந்தநிலையில் நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றுடன் ஒப்பிடும் போது, யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360.55 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 340.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 408.08 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 385.35 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri