பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக வீழ்ச்சியடைந்துள்ள ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி கடந்த சில தினங்களாக டொலரின் பெறுமதியில் மாற்றம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.91 ரூபாவாகவும், கொள்வனவு விலை 359.16 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

எவ்வாறாயினும், நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் யூரோவுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 370.47 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 355.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 424.34 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 408.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan