பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் இலங்கை மத்தியவங்கியின் செயற்பாடுகள் - முஜிபுர் பகிரங்கம்(Video)
நாட்டில் வங்கிகளுக்கு தற்போது அதிகளவான விடுமுறை வழங்குவது நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம்(26.06.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மத்திய வங்கியினுடைய செயற்பாடுகள் குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்றையதினம் முறைப்பாடொன்றை பதிவு செய்யவுள்ளோம்.
குறிப்பாக மத்திய வங்கியானது அரசாங்கத்தின் தேவைகருதி பெறப்படும் பணத்திற்காக திறைசேரி உண்டியல் தொடர்பான தகவல்களை வெளியிடும்.
200 பில்லியன் ரூபா பணம்
இந்நிலையில் திறைசேரி உண்டியலில் இருந்து கடந்த மாதம் 30 ஆம் திகதியும் இம்மாதம் முதலாம் திகதியும் 200 பில்லியன் ரூபா பணத்தை மத்திய வங்கி எடுத்துள்ளது.
இதன் பின்னரே வட்டிவீத குறைப்பு தொடர்பிலான அறிக்கை ஒன்றை மத்தியவங்கி வெளியிட்டிருந்தது.
இந்த வட்டி வீத குறைப்பின் மூலம் மக்களினுடைய 25 பில்லியனுக்கும் அதிகமான பணம் பறிபோயுள்ளது.
வட்டிவீத குறைப்பு தொடர்பில் மத்தியவங்கி ஆளுநர் முன்னரே அறிந்திருந்த போதும் 200 பில்லியன் ரூபா பணத்தை உடனடியாக பெற்றதன் காரணத்தை அறிந்து கொள்ளவே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வருகைதந்துள்ளோம்.'' என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |