கோவிட் தடுப்பூசியால் குருதி உறையுமா? சில நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கை
கோவிட் தடுப்பூசியான ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ராசேனிகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டால், குருதி உறையும் ஆபத்து அதிகரிப்பதாக வெளியான செய்திகளை அடுத்து, டென்மார்க் உட்பட சில நாடுகள் அந்த தடுப்பூசியை பயன்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
இந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட சிலரது உடலில் குருதி உறையும் நிலைமை ஏற்பட்டதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி இருந்தன.
எனினும் இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 3 மில்லியன் பேரில் 22 பேருக்கே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து தொடர்பான முகவர் அமைப்பு கூறியுள்ளது.
அத்துடன் இந்த நபர்களின் உடல் குருதி உறைந்தமையானது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டமைக்கான பின்விளைவு என்பதற்கான சாட்சியங்கள் இல்லை எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எஸ்ட்ராசேனிகா தடுப்பூசியின் பிரதிபலன் உயர்ந்த மட்டத்தில் இருப்பதாகவும், தடுப்பூசி குறித்த பரிசோதனைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து தொடர்பான கட்டுப்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசியினால் குருதி உறையும் ஆபத்து இருப்பதற்கான எந்த சாட்சியங்களும் இல்லை எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
