சோதிட மாயைக்குள் சிக்கிய ரணில் - அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் வெளியான தகவல்
நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த புதன்கிழமையே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படவிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு
ஆனாலும் சோதிடத்திற்கமைய, கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது சரியான முடிவல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சோதிடத்திற்கமைய, நேற்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாடாளுமன்றம் ஒத்தி வைப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
சோதிடத்தின் மீது நம்பிக்கை
அதற்கமைய, புதிய கூட்டத்தொடர் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஆட்சியாளர்களும் சோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாக செயற்பட்டனர். சோதிடர்களின் ஆலோசனைக்கு அமையவே அனைத்து அரசியல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இறுதியில் மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் ரணில் விக்ரமசிங்கவும் சோதிடம் எனும் மாயைக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.