உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் வழங்கப்படவில்லை - ஆயர்கள் மாநாடு வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்கும் சுதந்திரம் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கையில் நடைபெற்ற கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயத்தில் நீதித்துறை தமது பொறிமுறையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று ஆயர்கள் மாநாடு வலியுறுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் தொடர்பான 22 முக்கியமான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், குறித்த ஆவணங்கள் அவருக்கு விரைவில் வழங்கப்பட வேண்டுமென ஆயர்கள் மாநாடு கோரியுள்ளது.
இந்த விடயத்தில் உடனடி மற்றும் வெளிப்படையான, நீதிக்கான செயல்முறை அவசியம் என்றும் ஆயர்கள் மாநாடு தெரிவித்துள்ளது.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
