திருகோணமலையில் நில அபகரிப்பை விளக்கும் ஆவணப்படங்கள் வெளியீடு
திருகோணமலை மாவட்டத்தின் மக்கள் நில அபகரிப்புக்களை எடுத்து காட்டும் வாழ்வியலுடன் தொடர்புடைய "சம்பூர் மின் உற்பத்தி நிலையம் முதல் சக்தியற்ற வாழ்க்கை" மற்றும் "திரியாயின் ஆத்திக்காடு" ஆகிய இரண்டு ஆவணத் திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு, திருகோணமலை ஜுப்லி மண்டபத்தில் இன்று(25.05.2025) இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள மக்களின் முதன்மையான சிக்கல்கள் தொடர்பில் ஆவணப்படுத்தும் வகையில் இந்தத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் மற்றும் சமூக சிவில் செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
