இந்திய பிரதமரிடம் கையளிக்கும் ஆவணம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்க இதுவே காரணம்! சுமந்திரன் விளக்கம் (VIDEO)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பிப்பதற்கென தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து ஆவணத்தை தயாரிக்கும் வகையில் ரெலோ மேற்கொண்ட முயற்சியை மழுங்கடிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பது தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையாது என்பதன் அடிப்படையிலேயே குறித்த சந்திப்பு குறித்து தாம் விமர்சனங்களை முன்வைத்ததாக அவர் கூறியுள்ளார்.
எனினும் இறுதியில் தமிழ் பேசும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இணக்கம் வெளியிட்டதன் அடிப்படையில் குறித்த ஆவணத்தின் பொருளானது மாற்றப்பட்டதாகவும் எமக்கு வழங்கிய விசேட செவ்வியில் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியப் பிரதமரிடம் கையளிக்கப்படுவதற்கென தயாரிக்கப்படும் ஆவணமானது, 'தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும் என தலைப்பிடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் நேற்று அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்தார்.
முன்னர் ”13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோருதல்” என்ற பெயரில் ஆவண வரைபு தயார் செய்யப்பட்டிருந்த போதிலும் புதிய ஆவண வரைபில் அதன் நோக்கம், பொருள் என்பன மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடிதத் தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் ரெலோ தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியை தாமே மேற்கொண்டது
போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தவே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு அறிக்கையை
வெளியிடுவதாக அரசியல் ஆய்வாளர்கள் முன்வைத்திருந்த விமர்சனம் குறித்து எமக்கு வழங்கிய விசேட செவ்வியில் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri